எயிட்ஸ் என்பது ஒரு நோயல்ல இவ்வாறு சொல்லும்போது உங்களுக்கு வியப்பாக இருக்கும் என்றாலும் உண்மை அது தான் . Acquired immunodeficiency syndrome என்பதன் சுருங்கிய வடிவமே AIDS என்பது .
AIDS என்றால் நோய் எதிர்ப்பு ஆற்றலை உடல் இழக்கும் நிலை என்று பொருள் . ஆக நோயை எதிர்த்து தடுக்கும் இயற்கையான ஆற்றலை உடல் இழப்பதற்க்குத்தான் " எயிட்ஸ் " என்று பெயர் எனவே எயிட்ஸ் என்பது ஒரு நிலை நோய் அல்ல .
இயற்கையாகவே நமது உடலுக்குள் எந்த நோயையும் எதிர்த்து தடுக்கும் ஆற்றல் உண்டு (immune power) நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவை , இந்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலோ அல்லது வெள்ளை அணுக்கள் அழிக்கப்பட்டாலோ நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது , எயிட்ஸ் உள்ளவரின் உடலில் வெள்ளை அணுக்களை அழித்து உடல் நோய் எதிர்ப்புஆற்றலை இழக்கும்படியாக செய்வது HIV ( Human immunodeficiency virus ) என்னும் வைரஸ் கிருமியாகும்.
HIV கிருமி வெள்ளை அணுக்களைப் போன்றே தன் வடிவத்தைப் பெற்றுள்ளது , எயிட்ஸ் உள்ள ஒருவரின் ஒரு சொட்டு ரத்தத்தில் 500 மில்லியன் கிருமிகள் இருக்குமென்றால் அவை எவ்வளவு சிறியது என்பதை கற்பனை செய்து உணர்ந்துகொள்ளுங்கள் .
இந்த கிருமி உடலைத் தாக்கியவுடன் "எயிட்ஸ் " வந்துவிடுவதில்லை . இக்கிருமி உடலுக்குள் நுழைந்து மெல்ல மெல்ல தன் எண்ணிக்கையை பெருக்கி கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை அணுக்களை அழித்து நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாத நிலையை உருவாக்குகிறது.
இந்த கிருமியால் பாதிக்கப் பட்டவர்களை ஒரு ஆய்விற்கு உட்படுத்தி அவர்கள் உடலில் ஏற்ப்படும் மாற்றத்தை கூர்ந்து நோக்கும்பொழுது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உறுதுணையாக இருக்கும் T4 மற்றும் T8 வகையிலான வெள்ளை அணுக்கள் குறைபாடு இருப்பதை கண்டறிந்தனர் .
இந்த T4 எனப்படும் அணுக்கள் helper cells அல்லது commanding cells என்று அழைக்கப்படுகிறது , அதாவது அந்நியக் கிருமிகள் ஏதாவது நம் உடலுக்குள் நுழைந்துவிட்டால் இந்த T4 செல்கள் அதை அறிந்து மற்ற செல்களுக்கும் தெரியப்படுத்தி, எச்சரிக்கை செய்து அந்த கிருமியை அழிப்பதற்கு துணை நிற்கிறது. T8 வகையிலான செல்கள் T4 ன் கட்டளையை ஏற்று புதிய கிருமிகளை தாக்கி அழிக்கிறது .
மேலும் எயிட்ஸ் வந்தவருக்கு அவரின் ஜீரண உறுப்பு தான் முதலில் பாதிக்கப்படும் அதைத்தொடர்ந்து மண்ணீரலும் பாதிப்படையும் , இதன் காரணமாக அவருக்கு அதீத வயிற்றுப்போக்கு , வாந்தி ஏற்படலாம் , உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் சரியாக உடலில் சேராமல் உடற்சோர்வு ஏற்ப்படும், உடல் எடை விரைவாய் குறைய ஆரம்பிக்கும் எடுத்துக்காட்டாக 60 கிலோ எடை உள்ளவர் ஒரே மாதத்தில் 54 கிலோவாக குறைவார் , மண்ணீரல் பாதிப்படைவதால் அதன் அறிகுறியாக உதட்டில் காளான் போன்ற புண்கள் ஏற்ப்படும் , மற்றும் நீடிக்கும் காய்ச்சல் அதாவது அந்நியக் கிருமிகள் நமது உடலில் நுழைந்துவிட்டால் நம் உடல் வெப்பத்தில் அவை உயிர்வாழ்ந்து விடும் எனவே அதை அழிக்க இயற்கையாகவே நமது உடல் வெப்பத்தை உயர்த்தி அந்த கிருமியை அழிக்கப் பார்க்கும் அந்த கிருமி அழியும் வரை வெப்பத்தை உயர்த்தும், அந்த கிருமி அழிந்தவுடன் மீண்டும் உடல் இயல்பு நிலைக்கு திரும்பும் இது சாதாரணமாக நமக்கு ஏற்ப்படும் காய்ச்சல் ஆனால் இந்த நோய்க்கிருமிகளின் தீவிரத்தால் கிருமிகளை அழிக்க முடியாமல் தொடர்ந்து காய்ச்சல் ஏற்ப்படும், மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளதால் எந்த நோயும் எளிதில் தாக்கும் அபாயம் உண்டு , உதாரணமாக எயிட்ஸ் உள்ள ஒருவருக்கு காசநோய் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் , அந்த காசநோயை எதிர்க்கும் ஆற்றல் அவர் உடலுக்கு இல்லாததால் அந்நோய் தீவிரமடைந்து அதனால் கூட அவர் மாண்டு போகலாம் .
உடலுக்கு நோய் தடுப்பு ஆற்றல் இல்லாமல் போனால் என்ன , மருந்து மாத்திரைகளை கொடுத்து நோயை குணப்படுத்திவிட முடியாதா ? என்று தான் எல்லோரும் பொதுவாக எண்ணுவார்கள் ஆனால் அது அறியாமயின் அடையாளம் .
மருந்து மாத்திரைகள் எப்போதும் நேரடியாக நோயை குணப்படுத்துவதில்லை , மருந்து மாத்திரைகளால் வெள்ளை அணுக்களை தூண்டி அந்த வெள்ளை அணுக்கள் மூலம் தான் நோயை குணப்படுத்த முடியும் வெள்ளை அணுக்கள் உடலுள் போதிய அளவு இல்லை என்றால் மருந்து மாத்திரைகள் உடலில் எந்தவித பயனும் தராது அதோடு அல்லாமல் உண்ணப்படும் மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தி மேலும் பல உபாதைகளை உண்டுபண்ணலாம். அதன் காரணமாகக்கூட நீண்டநாள் வாழ வேண்டியவர் குறுகியகாலத்திலேயே மாண்டு போகலாம் ,
சரி இந்த நோய் கிருமி தாக்கியவரை வேறு ஏதாவது வகையில் பாதிப்பின் தீவிரத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து அவரை இன்னும் சிலகாலம் வாழவைக்க முடியுமா ? என்றால் நிச்சயம் முடியும் ,,,,,,,,,, வெள்ளை அணுக்களான T4 மற்றும் T8 ன் உற்பத்திக்கு பெரும்பங்கு வகிக்கும் எலும்புமஜ்ஜைகள் மற்றும் நிணைநீர் மண்டலங்கள் , தைமஸ் சுரப்பி ஆகியவைகளின் இயக்கங்களை சீர்படுத்துவதன் மூலம் வெள்ளை அணுக்களை பெருக்க முயற்சிக்கலாம், சீர்கெட்டுள்ள இரைப்பை மற்றும் மண்ணீரல் ஆகியவற்றை பழையநிலைக்கு கொண்டுவந்து இன்னும் சிலகாலம் வாழ வைக்க முடியும்,,,,,,,
ஒரு ஆய்விற்காக கோவை சுற்றுவட்டார பகுதியில் யாருக்கேனும் இந்த AIDS பாதிப்பு இருந்தால் என்னை தொடர்புகொள்ளச் செய்யவும் அல்லது எனக்கு தெரியப்படுத்துங்கள் , ரகசியம் காக்கப் படும் தொடர்புகொள்ள வேண்டிய எண் : 9842288292
முக்கியமானதாக கருதினால் பகிரவும்,,,,,,
-மா கோ
0 comments: