தண்ணிரில் கார்


தண்ணீரை வைத்து என்ன செய்யலாம்?குடிக்கலாம்,குளிக்கலாம்,குடுவையில் அடைத்து வியாபாரம் செய்யலாம். தண்ணீரை வைத்து வாகனங்களை ஓட வைக்க முடியுமா? முடியும்.

ஓட வைத்துவிட்டார்கள்.இனி விற்பனைக்கும் கொண்டு வந்து விடுவார்கள்.Fuell Cell Technology யில்,அது என்ன Fuel Cell?

தண்ணீர்-H2O இதை வலுவான மின்வாய்கள்-Electrodes,கொண்டு ஹைட்ரஜன் அயனியாகவும்,ஆக்சிஜன் அயனியாகவும் உடைத்து,இதில் எதிர் மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் அயனியை ,ஏனெனில் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்சாரம் என்பதால்,
அந்த ஹைட்ரஜன் அயனிகளை மட்டும் மின்கடத்திகள் வழியே செலுத்தி, ஒரு மின்னோடியை -DC Motor- ஓட வைத்து,அதனை ஒரு பல்சக்கரப் பெட்டியுடன் -Gear Box-இணைத்து ,அதன் மூலம் வாகனத்தின் சக்கரங்களை ஓட வைப்பது.அதாவது டீசல்/பெட்ரோல் டேங்கையும்,இயந்திரத்தையும் Engine-எடுத்துவிட்டு,அந்த இடத்தில் தண்ணீர்தொட்டியையும்,மோட்டாரையும் வைப்பது, இதுவே Fuel Cell தொழில்நுட்பம்.

இதில் பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் அயணி,மீண்டும் ஆக்சிஜனுடன் சேர்ந்து நீராக மாறிவிடும்.கொஞ்சம் சூடாக இருக்கும் அவ்வளவுதான்.அதாவது வண்டியின் புகைபோக்கியிலிருந்து-Silencer-லிருந்து புகைக்குப் பதிலாக தண்ணீர்.அதையும் கூட மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பத்தை NASA கண்டறிந்திருந்தாலும்,இதைக் கொண்டு வாகனங்களை ஓட வைத்தது ஜப்பான் தான்.ஜப்பானியர்கள் தான்.

ஜப்பானை விட மிகத்திறமையான மனிதவளமிருந்தும் நாம் இன்னமும்,
இத்தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நிலையில் மட்டுமே தான் இருக்கிறோம்.

ஜப்பானியர்கள் எரிபொருள் விடுதலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க, நாமோ தண்ணீர்வைத்து-காவிரி,முல்லைப்பெரியாறு,
பாலாறு,மணல் லாரி -மீனவர்கள் படுகொலை,என பிரச்சனையாக,வியாபாரமாக உருமாற்றி முடங்கியுள்ளோம்.

அதனால் தான்,எரிபொருள் அடிமைகளான நமக்கு தண்ணீர் எதிர்கால மாற்று எரிபொருளாக மட்டும் தெரியவேயில்லை

-G Durai Mohanaraju

0 comments: