மார்கெட்டிற்கு சென்றால் நிறைய மாங்காயை பார்க்கலாம். ஆனால் மாங்காய் சாப்பிட்டால், சிலருக்கு பல் கூச ஆரம்பிக்கும். அத்தகையவர்கள் மாங்காயை இயற்கை முறையில் கனிய வைத்து சாப்பிடலாம். இங்கு மாங்காயை வீட்டிலேயே எப்படி இயற்கை முறையில் கனிய வைப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி மாங்காயை கனிய வைத்து சாப்பிடுங்கள். குறிப்பாக மாங்காயை கனிய வைக்கும் போது, அவை மஞ்சள் நிறத்தில் மாறும் போது, அவற்றை உடனே ஃப்ரிட்ஜில் வைத்து, நான்கு நாட்கள் கழித்து சாப்பிடுங்கள். சரி, இப்போது மாங்காயை கனிய வைக்கும் இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!! வீட்டிலேயே மாங்காயை கனிய வைப்பதற்கான சில வழிகள்... அரிசியில் போட்டு மூடி வைக்கவும் பச்சை மாங்காயை கனிய வைக்கும் வழிகளில் ஒன்று தான், அதனை அரிசியில் போட்டு மூடி வைத்து, 2 வாரங்களுக்கு பின்னர் பார்த்தால், அதன் நிறமானது மாற ஆரம்பிப்பதைக் காணலாம். வைக்கோல் பச்சை மாங்காயை வைக்கோலில் போட்டு நன்கு மூடி, வெளிச்சம் இல்லாத இருட்டு அறையில் போட்டு வைத்தால், மாங்காயானது கனிந்துவிடும். ஆப்பிள் உதவும் உங்களுக்கு ஆப்பிள் எத்திலின் வாயுவை அதிகப்படுத்தி, கனியாத மாங்காயை கனிய வைத்துவிடும் என்பது தெரியுமா? ஆம், வேண்டுமெனில் முயற்சி செய்து பாருங்கள். கனிந்த மாம்பழத்துடன் சேர்த்து வையுங்கள் ஏற்கனவே கனிந்த மாம்பழத்துடன், கனியாத மாங்காயை வைத்தால், அது எளிதில் கனிந்துவிடும். இருட்டான இடத்தில் வைக்கவும் மாங்காயை நல்ல பேப்பர் அல்லது கோனிப்பையில் போட்டு நன்கு சுற்றி, வெளிச்சம் இல்லாத இடத்தில் வைத்து சிறிது நாட்கள் சேகரித்தால், மாங்காயானது கனிந்துவிடும்
மாங்காய்

Subscribe to:
Post Comments (Atom)
0 comments: