இயற்கை நீச்சல்குளங்கள்

ஒரு இயற்கை நீச்சல் குளம் அல்லது குளம் ஒரு தூய சூழலியல் அமைப்பாகும். தண்ணீர் ரசாயனங்கள் இருந்து பாதுகாக்கப்பட்டு மற்றும் தாவரங்கள் நீர் மறுசுழற்சிக்கு பயன்படுத்தபடுகின்றன .உயிரியல் வடிகட்டிகள் ( biological filters)அல்லது இயற்கை தாவரங்கள் மூலம் நீர்   சுத்தகரிக்கபடுகிறது . இதுவே இயற்க்கை நிச்சல் குளம் ஏனெனில் இந்த  அமைப்பு  உயிரியலுக்கு நிகரானது (biological equivalentsஇந்த  இயற்கை உலகில்.
இயற்கை குளம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்:
  • நீச்சல் பகுதி / மண்டலம் (swimming pool)ஒரு வழக்கமான நீச்சல் குளம் அல்லது குளம் போல இருக்கும் அமைப்பாகும் 
  • மீளுருவாக்கம் பகுதி/  மண்டலம் (regeneration area) என்பது வரிசையாக குளம் வழிந்து  ஒரு குறிப்பிட்ட வடிகட்டும் மூலக்கூறு மற்றும் தாவரங்கள் நிரப்பப்பட்ட ஒரு பகுதி.தாவரங்கள்  நீரை  சுத்தபடுதுவதொடு உங்கள் குளத்துக்கும் அழகு கூட்டும் . இந்த உயிரியல் செயல்முறைகள் இந்த பகுதியில்  உள்ள நீரை சுத்த படுத்துகின்றன .
Wikipedia
pool-filtration-diagram
குளம் வடிகட்டுதல் அமைப்பு
நிச்சலடிபது அல்லது குதிப்பது போன்றவைகளால் நீர் மீளுருவாக்கம் பகுதியில் இருந்து நிச்சலடிக்கும் பகுதிக்கு தண்ணிரை கொண்டுசெல்கிறது .இயற்கை தாவரங்கள்  அசுத்தங்கள் மற்றும் அதன் சத்துக்களை  பாசிகளை வடிகட்டி  தடுக்கிறது. இயற்கை கற்கள் தண்ணிரை இயற்கை முறையில் வடிகட்டுகிறது .இந்த இயற்கை நிச்சல் குளம் அசுத்தங்கள் தங்காது எனவே சாக்கடைக்கு இணைக்க தேவையில்லை மற்றும் எரிசக்தி மற்றும் இயந்திர செலவினங்களைக் குறைகிறது.
இந்த இயற்கை குளம் மேலும் ஒரு சுற்று சூழல் அமைப்பு கொண்டது  தவளைகள், நத்தைகள் மற்றும் பிற இயற்கையாக வாழும் உயிரினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ வழிவகை செய்கிறது .இது ஒரு நல்ல அமைப்பு .
எனவே ஒரு இயற்கை குளத்தில் நீங்கள் அரிப்பு தோல், சிவந்த கண்கள், ஒவ்வாமை அல்லது குளோரின் நிரப்பப்பட்ட நீரின் முலம் வரும்  காரணங்கள் பூர்த்தி போன்ற  சிக்கல்கள் இல்லை.நீங்கள் ஒரு வெப்ப குழாய்கள் மூலம் உங்கள் குளத்தை  இணைக்க முடியும் அல்லது சூரிய ஆற்றல் சக்தியின் முலம் நீரை வெப்பமுட்ட மற்றும் விளக்குகள் போன்றவட்ட்ரை இயக்க முடியும் .இதனால் குழாய்கள், விளக்குகள் போன்றவற்றை  மின் பயன்பாட்டில் இருந்து சேமிக்கலாம் .

ஒரு இயற்கை நீச்சல் குளம் திட்டத்தை செயலாக்கம் செய்யும்போது  பின்வருபவற்றை கருத்தில் கொள்க :
– 2 மீ குறைந்தபட்ச ஆழம்
– சரியான சுத்திகரிப்பு regeneration- மற்றும் நீச்சல் பகுதிகள்  சமமாக இருக்க வேண்டும்
– சுத்திகரிப்பு regeneration- மற்றும் நீச்சல் பகுதிகள் தனித்தனியே   இருக்கவேண்டும் 
–  குளதுக்குகேன்று பொது தர விதிகள் இல்லை .ஊருக்கு மற்றும் காலநிலை ஏற்றாற்போல் மாறுபடும் 
– நீங்கள் உடனடியாக நீந்த முடியும் ஆனாலும் முழு உயிரியல் சமநிலை  அடைய இரண்டு அல்லது முன்று வருடங்கள் ஆகும்.
ஒரு இயற்கை குளம் ஒரு கிளாசிக்கல் இரசாயன குளத்தை  விட குறைந்த பராமரிப்பு வேண்டும் என்றாலும், ஒரு பருவகால பராமரிப்பு (seasonal care) இன்னும் தேவை: அவைகள் 
° வசந்த காலம் பராமரிப்பு(spring): தாவரங்கள் சீரமைக்கப்பட மற்றும் அதன்  அதிக வளர்ச்சியை  வெட்டி தவிர்க்க வேண்டும்  , ஒரு சாதாரண தோட்டத்தில் போன்ற அனைத்து பகுதிகளில் இருந்து வெளி அசுத்தங்கள் குறைக்க வேண்டும்.
° கோடை கால பாதுகாப்பு: சூடான நாட்கள் நீர் ஆவியாகி இருக்கலாம் மற்றும் குளத்தை பாதுகாக்க கூடுதல் தண்ணீர் வேண்டும்
° இலையுதிர் கால பராமரிப்புஇறந்த இலைகள் நீக்க மற்றும் பாசிகள் வளர்ச்சியை தடுக்க வேண்டும்
° குளிர்கால பராமரிப்புநம்மூரில் நீர் உறைக்கும் குளிர் ஆக வாய்ப்பு இல்லை அதலால் பிரச்னை இல்லை .

0 comments: