கேரட்டைப் பயன்படுத்துங்கள்



ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!.....................
மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது. எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம்,
உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே போதும். தினமும் காலையில் அருந்தி வந்தால் குளற்புதுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
வயிற்றுப் போக்கு, உணவு செரியாமை, கடும் வயிற்று வலி, பெருங்குடல் வீக்கம் முதலியவைகளுக்கும் கேரட் சாறு உதவுகிறது. இரைப்பையில் புண் ஏற்படாமல் இருக்க, கேரட் ஒரு நல்ல பாதுகாவலனாய் இருந்து உதவுகிறது. மலச்சிக்கல் உடனே குணமாக 25 மில்லி அளவு கேரட்சாறு, 50 மில்லி பசலைக் கீரைச்சாறு ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சம் பழத்தைக் கலந்து குடித்தால் போதும்,
பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும். பல் சொத்தை ஈறுகளில் இரத்தம் முதலியவை வராமல் இருக்கவும். சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு கேரட்டைக் கடித்துச் சாப்பிடவும். கேரட்டை இப்படி மென்று தின்பதால் உமிழ்நீர் அதிகமாக ஊறுகிறது..
இது உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டின் தோலுக்கு அருகிலேயே சோடியம், சல்ஃபர், குளோரின், அயோடின் போன்றவை அதிகமாக இருப்பதால் கேரட்டைத் தோல் சீவாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.
நன்கு கழுவினாலே போதும். சமையலில் என்றால் சற்றுப் பெரிய துண்டுகளாகச் சீவி, சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் சரிவரக் கிடைக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இவற்றுக்கு அவித்த கேரட்டைக் கொடுத்தால் அவை ஆரோக்கியமாக வளரும்

0 comments: