பெ‌ண்க‌ளு‌க்கு உளு‌ந்து



உளுந்தம் பருப்புடன் இருவாட்சி இலைகளை வதக்கி துவையல் அரைத்து உண்ண பித்தம், மயக்கம், வியர்வை, நாற்றம் குணமாகும். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். நன்கு பசி எடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடல் புற்று நோய், மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பித்தம், தாகம், வாய்கசப்பு நீங்கும். பரு வருவது குறையும். மலச்சிக்கல் நீங்கி பசியெடுக்கும்.

பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தை கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட தருவது நல்லது. அப்படிக் கொடுத்தால் அவர்களது இடுப்பு எலும்பு வலிமை பெறும். உடல் பலம் உண்டாகும். இதனை இரவிலும், வயதானவர்களும் தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுக் கடுப்பை உண்டாக்கி பசியைக் கெடுக்கும். மேலும், மலச்சிக்கல் அல்லது கழிச்சல் உண்டாகும்.

0 comments: