இன்குபேட்டர் இந்தியன்


இன்குபேட்டர் இந்தியனுக்கு ராயல் சல்யூட்!
ரூ.15 ஆயிரத்துக்கு இன்குபேட்டர்
மிகவும் குறைவான செலவில், கைக்கு அடக்கமாக ஒரு பை வடிவத்தில் இன்குபேட்டரைத் தயாரித்து எடைக் குறைவாக பிறக்கும் குழந்தைகளின் பாதுகாவலராக மாறியிருக்கிறார் சென்னை ஐ.ஐ.டியில் படித்த ராகுல் அலெக்ஸ் பணிக்கர்.
இன்குபேட்டருக்குள் இருக்கும் குழந்தையை கண்ணாடி வழியே ஏக்கத்துடன் பார்த்து, அதன் அசைவுகளை ரசித்து, கையில் அள்ளியெடுத்து கொஞ்சமுடியாமல் பரிதவிக்கும் தாயின் வேதனைக்கு 'கை மேல்’ பலனைத் தந்து, மருத்துவ மேதைகளையே வியக்கச் செய்திருக்கிறது இவரது சாதனை. இந்தச் சாதனையைப் பாராட்டிய வர்களில் முக்கியமானவர் அமெரிக்க அதிபர் ஒபாமா.
தற்போது, பெங்களூரில் 'எம்ப்ரேஸ் இன்னோவேஷன்’ என்ற நிறுவனத்தை நிறுவி, தனது நண்பர்களுடன் இணைந்து கை அடக்க இன்குபேட்டரைத் தயாரித்து, உலகம் முழுவதும் சப்ளை செய்துவருகிறார் ராகுல்.
சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்து, எலெக்ட்ரிக் இன்ஜி னீயரிங் முடித்தேன். பிறகு, அமெரிக்காவின் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றேன். பிறகு சிலிக்கன் வேலியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வேலை செய்பவர்கள் பொதுவாக இணையம் தொடர்பான ஆராய்ச்சிகளிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் நான், லினஸ் லியாங், ஜேன் சென், நாகானந்த் மூர்த்தி ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து புதிதாக ஏதேனும் ஒரு மருத்துவப் பொருளை வடிவமைக்கத் திட்டமிட்டேன். அமெரிக்காவில், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் உயிர்்காக்கும் இன்குபேட்டரின் விலை கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய்.
அப்போதுதான் இந்த இன்குபேட்டர் ஐடியா வந்தது. எங்களுக்கு முன்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் விலை குறைவாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு தரத்தில் சொதப்பி
யிருந்தார்கள். அதனால் விலையைப் பற்றி கவலைப் படாமல் இன்குபேட்டரை வேறு வடிவத்தில் உருவாக்கு வதில் மட்டும் கவனம் செலுத்தினோம். நாங்கள் விரும்பிய இன்குபேட்டரை வடிவமைக்க நான்கு ஆண்டுகள் பிடித்தது. ஆனால் யாருமே நாங்கள் வடிவமைத்த இன்குபேட்டரை வாங்கவில்லை. மற்ற கண்டுபிடிப்புகள்போல இதுவும் மூலையில் முடங்கிவிடக்கூடாது என்பதால், தரத்தில் சமரசம் செய்யாமல் லாபத்தைப் பற்றி கவலைப்படாமல் குறைந்த விலையில் நாங்களே இன்குபேட்டர்களைத் தயார் செய்தோம்.
இப்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 14 மாநிலங்களிலும், சீனா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளிலும் எங்களின் இன்குபேட்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனால் இதுவரை சுமார் 80 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் சராசரியாகப் பிறக்கும் 30 சதவிகிதக் குழந்தை களுக்கு இன்குபேட்டர் தேவைப்படுகிறது. வசதியான வர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால் ஏழைகள், கிராமப் புறங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்்தால் அவர்களைக் காப் பாற்ற முடியவில்லை. அதை எங்கள் கண்டுபிடிப்பு போக்கும்' என்றவர், பழைய இன்குபேட் டருக்கும் புதிய வடிவ மைப்புக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்தும் பேசினார்...
'்இப்போது நடைமுறையில் இருக்கும் இன்குபேட்டருக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தேவை. பிறந்தவுடனேயே குழந்தையின் உடல் முழுவதும் வயர்கள் பொருத்தப் பட்டிருக்கும். பால் கொடுக்க மட்டும் தாய்க்கு அவ்வபோது அனுமதி அளிக்கப்படும். தாயைத் தவிர மற்றவர்கள் குழந்தையை நேரில் பார்க்கக் கூட முடியாது. தவிர, இந்த இன்குபேட்டரில் குழந் தையைப் பராமரிக்க நிறைய செலவும் ஆகும். ஆனால் நாங்கள் வடிவமைத்துள்ள இன்குபேட்டருக்குத் தொடர்ச்சியாக மின்சாரம் தேவை இல்லை. வயர்களை உடல் முழுவதும் பொருத்த வேண்டியதும் இல்லை. அவ்வப்போது மெழுகை சார்ஜ் செய்து கொண்டால் போதும்.
இந்த இன்குபேட்டருக்கு ஏ.சி அரங்கு தேவையில்லை. தாயின் மடியிலேயே வைத்துக் கொள்ளலாம். இன்குபேட்டர் பையில் ஒரு மெழுகுப்பை வைக்கப்பட்டிருக்கும். மூடிய உறையில் பாதுகாப்பாக இருக்கும் இந்த மெழுகுதான் குழந்தையைப் பாதுகாக்கத் தேவையான வெப்பநிலையை தருகிறது. மெழுகுப் பையை சூடேற்ற மின்சார உதவியுடன் இ்யங்கும் பிரத்யேக சார்ஜர் இருக்கிறது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் மெழுகுப் பையை சார்ஜ் செய்துவிட முடியும். இன்குபேட்டரின் பக்க வாட்டில் இருக்கும் பச்சை விளக்கு எரிந்தால், மெழுகுப்பை தயார் நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் நான்கு முதல் ஆறு மணிநேரம் வரை இன்குபேட்டரில் மெழுகு போதிய சூட்டில் இருக்கும். இந்த புதிய இன்குபேட்டரை ரூ.15 ஆயிரத்துக்குத் தருகிறோம்.'
'இதை எப்படிப் பயன் படுத்த வேண்டும்?'
'புத்தகப்பை வடிவத்தில் இருக்கும் இந்தப் பையின் ஒரு பாதியில் மெழுகு நிரப்பட்ட பை இருக்கும். இந்த மெழுகுப் பைக்கு மேல் உள்ள உறையில் குழந்தையை வைத்து பையை மூடி விடவேண்டும். குழந்தை மெழுகின் சூட்டில் கதகதப்பு டன் பாதுகாப்பாக இருக்கும். 4 மணி நேரத்துக்குப் பிறகு இன்குபேட்டரின் பக்க வாட்டில் இருக்கும் விளக்கின் மூலம் மெழுகின் சூடு குறைந் திருக்கிறதா எனப் பார்த்து ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இன்குபேட்டர் பையின் மீது தூசி, தண்ணீர் படாதவாறு பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.
இந்த இன்குபேட்டரைப் பற்றி அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா எங்கள் குழுவைப் பாராட்டினார். தற்போது இந்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் இந்த இன்குபேட்டரைப் பற்றி விளக்கி அறிக்கை கொடுத்திருக்கிறோம். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம்.
இந்த இன்குபேட்டரில் உள்ள ஒரே குறைபாடு, 4 மணி நேரம் வரை மட்டுமே இதைப் பயன்படுத்தமுடியும். பிறகு திரும்பவும் ரீசார்ஜ் செய்துதான் உபயோகப்படுத்த முடியும். 8 10 மணி நேரம் ரீசார்ஜ் செய்யாமல் இந்த இன்கு பேட்டரைப் பயன்படுத்தவும், அதே நேரம் உற்பத்தி விலை அதிகரிக்காமல் இருக்கவும், தொடர் ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகிறோம்' என்றார் ராகுல் அலெக்ஸ் பணிக்கர்.
நன்றி விகடன் : குழுமம் :கட்டுரை :பு.விவேக் ஆனந்த், படங்கள்: வி.செந்தில் குமார், ஆ.முத்துக்குமார்

0 comments: