மத்திய அரசின் சிறுபாண்மையினர் நலத்துறை


மத்திய அரசின் சிறுபாண்மையினர் நலத்துறை மூலம் பத்தாம் வகுப்பு மேல் பயிலும் +1,+2,தொழிற்கல்வி (B.E/B.Tech/M.B.B.S/B.Sc nursing/MCA) பயிலும் சிறுபாண்மை மாணவர்களுக்கு அதாவது முஸ்லிம்,கிறுஸ்தவர்,புத்த மதத்தினர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவி தொகை வழங்கிவருகிறது. இந்த வருடமும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ONLINE-ல் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 30ம் தேதி கடைசி நாள். உதவித்தொகையாக வருடத்திற்கு ரூபாய் 30,000/- வரை வழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனைகள்:
பெற்றோரின் வருமானம் வருடத்திற்கு 2.50 லட்சங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
தகுதி(+2) தேர்வில் 50% குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இணையதள முகவரி: www.momascholarship.gov.in
மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று MERIT CUM MEANS SCHOLARSHIP என்ற பட்டனை சொடுக்கவும்
அடுத்து வரும் முகப்பு பக்கத்தில் STUDENT REGISTRATION என்பதை சொடுக்கவும்.
பிறகு அந்த பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை (பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல், கைபேசி எண், குடும்ப ஆண்டு வருமனம்) தவறில்லாமல் பதிவு செய்யவும்.
பதிவு செய்ததும் உங்களுக்கென்று ஒரு TEMPORARY ID உருவாகிவிடும். இந்த ID யை கொண்டு தான் அடுத்த பகுதிக்கு செல்லமுடியும்
முகப்பு பக்கத்தில் STUDENT REGISTRATION-இன் கீழ் உள்ள UPDATE STUDENT DETAIL என்ற பட்டனை சொடுக்கவும்
அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய TEMPORARY ID, பிறந்த தேதி, தாய் பெயர் ஆகியவற்றை கொடுத்து உள்ளே செல்லவும்
அந்த பக்கத்தில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் ஒரே முறையில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்தையும் பதிவு செய்த பின் SAVE என்ற பட்டனை அழுத்தவும். இவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மேற்கூறியவாறு உள் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
அனைத்து தகவல்களும் சரியாக கொடுத்த பின் SUBMIT என்ற பட்டனை அழுத்தவும், SUBMIT பட்டனை அழுத்திய பின் எந்த தகவலையும் மாற்ற முடியாது.
பிறகு வரும் பக்கத்தில் உள்ள PRINT AND PREVIEW என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
அந்த விண்ணப்பத்தில் கேட்க்கப்பட்டிருக்கும் தகவல்களையும் பூர்த்தி செய்து அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களையும் இணைத்து அந்த விண்ணப்பத்தின் கடைசி பக்கத்தில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்களுடைய விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கான உதவித்தொகை கீழ்கண்டவாறு வழங்கப்படும்:
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு விடுதி கட்டணம் ரூபாய் 10,000/- உங்களுடைய வங்கி கணக்கிற்க்கும் மீதமுள்ள ரூபாய் 20,000/- கல்வி கட்டணம் நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துடைய வங்கி கணக்கிற்க்கும் வந்துவிடும்.
வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரூபாய் 20,000/- நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துடைய வங்கி கணக்கிற்க்கும் வந்துவிடும். மேலும் விபரங்களுக்கு
http://www.bcmbcmw.tn.gov.in/documents/PostmatricSchemeDetailsforMinorities.pdf
நன்றி:Hibayathullah AbdulHameed

0 comments: